Monday, May 14, 2007

உணர்வுச்சுவடுகள்...

சுயங்களின் சூனியத்தை
சுட்டெரிக்க விரும்பினேன் !
முடியவில்லை என்னால் !

மற்றவர்களுக்காய்...

என் இதழ் விரித்தேன் !
விலகவில்லை...
உன்னில் சிதறிய
என் நினைவுகள் மட்டும்...!

கைப்பிடி இதயத்தை
என்னை இம்சிக்காமல்,
இடம் பெயற்றாயடா ???

நான் வெற்றி பெறும்போதெல்லாம்,
நீ பிடித்த கரம் !
தோல்விகளால் துவண்டபோதெல்லாம்,
எனைச் சாய்த்துக்கொண்ட

உன் தோள் !

என் கண்ணீரை
இவ்வுலகம் எட்டிப்பார்க்க விடாத
உன் ஸ்பரிசம் !

உடைந்த போதெல்லாம்
என்னை உதிராமல் காத்த
உன் இதழ் !

வேதனிக்கிறேன் !
எனில் விழும்
சிறு கீரலயும் தாங்கீடாத
உன் மனம்....


எனை மறந்து..
என்னுயிர் கிழித்தெறிந்து...
உணர்வுகளை உரித்தெடுத்து
எனை....
உறைபனியாய் விட்டுச்செல்ல
எப்படி சம்மதித்தது,
உனக்கும் எனக்குமான
நம் உணர்வுச்சுவடுகள்...? ? ?

நிதர்சனமான உண்மை தான் !

உன்னுடன் சேர்ந்து,
உன் வலக்கரம் பிடித்து,
ஊரறிய உலா வரும்
திருநாள் கண்டேன் !

உன் தோள் சாய்ந்து,
உதடு சுடும் மௌனத்துடன்,
வெட்கம், வெளிச்சம் - இவை உதறி,
உறைபனியில் பாதம் பதித்து,
பலநூறு மைல்கள் நடைபழக...

நிதர்சனமான உண்மைதான்.... !
உன்னுடன் இருப்பது ஒரு கோடி சொர்கம்பெரும் !

-உன்னவள்

தெரியவில்லை எனக்கு !

அன்பே !
அதிர்ந்து போனேன்,
உன் அசைவுகளைக் கண்டு !

நொறுங்கிவிட்டேன்,
உன் நேசத்தைப் பார்த்து !

நெகிழ்ந்து போனேன்
உன் நிஜத்தை உணர்ந்து !

தெரியவில்லை எனக்கு !
உன் தற்காலிகப் பிரிவிலும்
ஊமையானேன்,
உயிர் வலிக்க !

தெரியவில்லை எனக்கு !
முழுமையாய் உனைப்பிரியும் தருணம்
"உயிரோடிருப்பேனா...?" என்று !

தெரியவில்லை எனக்கு !
என்னுயிர் பூக்களை
உதிராமல் பார்த்துக்கொள்வாயா ? ? ?

-ஊணுறைந்து உயிர் உறைய....

Saturday, May 12, 2007

உனக்கே மகளாகும் வரம் தா...

மனதிற்குள் ஒரு சஞ்சலம் !
சிகையில் நரை !
சோர்ந்த கண்கள் !
வேலை செய்தே தேய்ந்த கரம் !
இவை எல்லாம்....
" உனக்கு வயதாகி விட்டதோ ? "
காலத்தின் வேகத்தை,
உண்மையை உணர்த்துகின்றனவோ ?

வலி பொறுத்து உயிர் கொடுத்தாய் எனக்கு !

ஆசையாய் அழைத்து,
அன்பாய் முத்தமிட்டு,
அமைதியாய் உன் மடியில் தலை வைத்து,
ஆறுதலாய் என் முடி கோதி விடும் உன் கரம் பிடிக்கயில்....
அக்கணமே...
அக்கணமே என்னுயிர் பிரிந்தாலும் கவலை இல்லை !

இனி...
உனக்கு மட்டுமே மறுபடியும் மகளாக,
உன் மடியில் என் தலை சாய,
உளமார விழைகிறேன் !
எனக்குத் தெரியும்,
இல்லையென்று சொல்லாத உன் மனம் !
வரம் கேட்கிறேன் !
என்றென்றும்....
உனக்கு மட்டுமே மகளாக!

-வரம் வேண்டும் உன் அன்பு மகள்.....
ஸ்வர்ணா.