Saturday, May 12, 2007

உனக்கே மகளாகும் வரம் தா...

மனதிற்குள் ஒரு சஞ்சலம் !
சிகையில் நரை !
சோர்ந்த கண்கள் !
வேலை செய்தே தேய்ந்த கரம் !
இவை எல்லாம்....
" உனக்கு வயதாகி விட்டதோ ? "
காலத்தின் வேகத்தை,
உண்மையை உணர்த்துகின்றனவோ ?

வலி பொறுத்து உயிர் கொடுத்தாய் எனக்கு !

ஆசையாய் அழைத்து,
அன்பாய் முத்தமிட்டு,
அமைதியாய் உன் மடியில் தலை வைத்து,
ஆறுதலாய் என் முடி கோதி விடும் உன் கரம் பிடிக்கயில்....
அக்கணமே...
அக்கணமே என்னுயிர் பிரிந்தாலும் கவலை இல்லை !

இனி...
உனக்கு மட்டுமே மறுபடியும் மகளாக,
உன் மடியில் என் தலை சாய,
உளமார விழைகிறேன் !
எனக்குத் தெரியும்,
இல்லையென்று சொல்லாத உன் மனம் !
வரம் கேட்கிறேன் !
என்றென்றும்....
உனக்கு மட்டுமே மகளாக!

-வரம் வேண்டும் உன் அன்பு மகள்.....
ஸ்வர்ணா.

4 comments:

seenu said...

Great Work ladha ..!!

Radha Shanmugam said...

Good work Swarna. It is fantastic

InfoTimeChannel said...

Latha Jiiii, Gr8 words.

sravan said...

பெற்றவள் பூமுகம் நரைகூடி போனாலும்
புன்னகைப் புருவங்கள் உனைபார்த்து குறையாது!
இவ்வுலகம் வெயிலாகி சுட்டெரித்து சாய்த்தாலும்
அன்னையோர் நினைவு மட்டும் என்றும் நீங்காது!!

தினமவள் நினைவுகள் நறுமலர் உதிர்க்க
உடனில்லை என்றெண்ணம் என்றென்றும் தோன்றாது!
நெஞ்சம் முழுவதும் உன் அன்னை உடனிருக்க
தூரமென்ன தேசமென்ன எத்தடையும் கிடையாது!!